கட்டாய ஓய்வு வயது மாற்ற முயற்சித்தால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை - ரவி குமுதேஷ்
சுகாதாரத்துறைசார் நிபுணர்களுடைய கட்டாய ஓய்வு பெறும் வயதை நீடிப்பு செய்வதற்கான முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
த மோர்னிங் இணையளத்திற்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், அனைத்து அரச ஊழியர்களுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறிப்பிட்டு வௌியிடப்பட்ட வர்த்தமானியை திருத்துவதற்கு சில தரப்பினர் முயன்று வருகின்றனர்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தீர்மானத்தை மாற்றுவதற்கு அமைச்சர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு நெருக்கமான சில நிபுணர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர், மருத்துவ நிபுணர்களின் ஓய்வு வயதை 63 வயது வரை நீடிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் நேற்று (10) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
300 இற்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதன் மூலம் தங்களுக்கும் அவர்களின் சேவைகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓய்வுபெறும் வயதை நீடிப்பதனூடாக அவர்களுக்கும் அவர்களுடைய சேவைக்கும் பாதிப்பு ஏற்படும் என்றபோதிலும் 60 வயதுடைய ஒரு விசேட வைத்திய நிபுணருடைய விருப்பத்திற்காக மாத்திரம் முன்மொழிவை சமர்ப்பித்து அமைச்சரவை மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது என்றும் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சண்டே மோர்னிங் இணையதளத்திற்கு கருத்து வௌியிட்டுள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல, தாம் ஓய்வுபெறும் வயது குறித்து தீர்மான முடிவு இதுவரை எடுக்கவில்லை என்றும் சுகாதார அதிகாரிகள் உட்பட சில விசேடநிபுணர்களுடைய ஓய்வு பெறும் வயது குறித்து அரசதுறையின் அவசியம் குறித்த தீர்மானம் எடுக்கப்படும். தேவைக்கமைய ஓரிரு வருடங்கள் அவர்களுடைய சேவைக்காலம் நீடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.