அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும்: எச்சரிக்கை அறிவித்தல்

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வேண்டும்: எச்சரிக்கை அறிவித்தல்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வௌியிட்ட தொழிற்சங்க பிரதிநிதி உதேனி திஸாநாயக்க,

அரச ஊழியர்கள் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொருட்களின் விலைகள் ஒன்றுக்கு மூன்று வீதம் அதிகரித்துள்ளது. ஆனால் அரசாங்கம் இன்னும் ஐந்து சதம் கூட சம்பள உயர்வை வழங்க வில்லை. 2016ஆம் ஆண்டு சம்பளம் அதிகரிக்கப்பட்ட பின்னர் இதுவரையில் ஐந்து சதம் கூட சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்கவும் வேறு வசதிகளை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது. அரசு ஊழியர்கள் தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை.

அரசு ஊழியர்கள் விரைவில் வீதிக்கு இறங்குவர் என நாம் கூறுகின்றோம். அரச ஊழியர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. நிறுத்தவும் மாட்டோம். அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அல்லது கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் அரசாங்கத்திடம் முன் வைப்பதாக உதேனி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image