பதிவு செய்யப்படாத தொழிற்சங்கங்கள் தொடர்பான அறிவித்தல்

பதிவு செய்யப்படாத தொழிற்சங்கங்கள் தொடர்பான அறிவித்தல்

தொழில் திணைக்களத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2,015 தொழிற்சங்கள் மாத்திரமே பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவிக்கிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படாத தொழிற்சங்கங்கள் நடைமுறை செயற்பாடுகளில் ஈடுபட எந்தவொரு அடிப்படை அதிகாரமும் இல்லை என தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் மொத்த எண்ணிக்கை 2005 ஆக காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் புதிதாக 10 தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொழிற்சங்கம் தொழில் திணைக்களத்திலேயே பதிவு செய்யப்பட வேண்டும்.

பதிவுசெய்யப்படும் தொழிற்சங்கத்தில், தாம் வேலைச்செய்யும் நிறுவனத்தின் சேவையாளர்களில் 40 சதவீதமானவர்கள் இருப்பார்களாயின், அதன் அடிப்படையிலேயே குறித்த தொழிற்சங்கத்தின் யாப்பு உருவாக்கப்படும்.

தொழில் திணைக்களத்தில் பதிவு செய்யாமல் செயற்படுவது சட்டத்திற்கு முரணானது. அவ்வாறு செயற்பட இடமில்லை.

பிரதேச செயலங்கள் உள்ளிட்ட வேறு அலுவலகங்களில் வேறொரு அமைப்பாக பதிவு செய்துகொள்ளலாம் என தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image