இலங்கையில் முறைசாரா துறையில் சம்பளம் பெயரளவிற்கு உயர்ந்துள்ள போதிலும், பணவீக்கம் காரணமாக சம்பளம் உண்மையில் அடிப்படையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக ECONOMY NEXT இணையத்தளம் வெளிப்படுத்துகிறது.
கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் ஒரு வருட காலப்பகுதிக்கான உத்தியோகபூர்வ தரவுகளை மதிப்பீடு செய்து அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
ECONOMY NEXT இணையதளத்தின்படி, ஜூன் 2022 இல் முடிவடைந்த ஆண்டில் நாட்டின் விவசாயத் துறையில் பெயரளவு ஊதியம் 28% அதிகரித்துள்ளது, ஆனால் உண்மையான ஊதியம் 11% குறைந்துள்ளது.
அந்நிலைக்குக் காரணம் இலங்கையின் உயர் பணவீக்கம்தான்.
அதே காலகட்டத்தில் முறைசாரா துறையில் ஊதியங்கள் 26% அதிகரித்துள்ளது, ஆனால் பணவீக்கம் காரணமாக அந்த வகையில் உண்மையான ஊதியம் சுமார் 20% குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் முறைசாரா சேவைத் துறையில் ஊதியம் 30% அதிகரித்துள்ளது, ஆனால் பணவீக்கம் காரணமாக ஊதியம் உண்மையான அடிப்படையில் 17.9% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாத உயர்வுடன் ஒப்பிடும்போது அவர்களின் உண்மையான ஊதியம் 26% குறைந்துள்ளது என்றும் இணையதளம் காட்டுகிறது, இருப்பினும் அரசதுறை ஊதியங்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.