அரச சேவை சுமையா? அரசியல்வாதிகளின் கருத்தின் பின்னணியை அம்பலமாக்கிய தொழிற்சங்கம்

அரச சேவை சுமையா? அரசியல்வாதிகளின் கருத்தின் பின்னணியை அம்பலமாக்கிய தொழிற்சங்கம்

அரச சேவை சுமை என அரசியல்வாதிகள் கூறுவதற்கான காரணத்தை தொழிற்சங்கம் ஒன்று வௌியிட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

அரசு ஊழியர்கள் வேலை செய்ய முடியாவிட்டால் வெளியேற வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.  அரசு சேவை நாட்டுக்கு சுமையென பசில் ராஜபக்ச கூறியது முதல் அதன் பிறகு ரணில் விக்ரமசிங்க தற்போது இவ்வாறு கூறியிருக்கிறார். அவர்கள் சுமை என்று கூறுவது என்ன சுமை என்று எங்களுக்கு தெரிகிறது.

அதாவது தற்போது சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்கு செல்லும்போது நிபந்தனைகளை  நிறைவேற்றவேண்டும். இதன் போது கட்டாயமாக அரசவையில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும். இந்த ஆட்குறைப்பு செய்வதற்கான மக்கள் அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக இதுபோன்ற கருத்துகள் வௌியிடப்படுகின்றன.

அரச நிர்வாக அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், ஓய்வுபெற வேண்டிய 800க்கும் அதிகமானோர் ஓய்வுபெற வேண்டிய வயதில் உயர்பதவிகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

னவே விற்பனைக்கு அமைவான கருத்துக்களுக்கு மக்களின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவே இது போன்ற கருத்துகள் வெளியிடப்படுகின்றன. அனுமதி கிடைக்காது அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம் என ஒன்றிணைந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image