அரச ஊழியர்கள் தற்போது எதிர்நோக்கும் முக்கிய பல பிரச்சினைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை, ஆட்குறைப்புக்கு தயாராகின்றமை தொடர்பில், அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்க அரசு சேவை சார் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதையும் வாசியுங்கள் அரச சேவை சுமையா? அரசியல்வாதிகளின் கருத்தின் பின்னணியை அம்பலமாக்கிய தொழிற்சங்கம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்
அரச முகாமைத்துவ சேவை, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களான சந்தன சூரிய ஆராய்ச்சி, எஸ்.அத்தநாயக்க, உதேனி திஸாநாயக்க, யு.பலியவடன உள்ளிட்டோர் நாளை (29) முற்பகல் 10 மணிக்கு சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் மற்றும் அரச முகாமைத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
5 நாட்கள் சேவைக்கு அறிக்கையிடுவதன் மூலம் அதிகரித்துள்ள எரிபொருள் / பேருந்துக் கட்டணங்களை தாங்கிக்கொள்ள முடியாமை
வங்கிக் கடன் வட்டி வீதம் அதிகரிப்பு
அரச நிறுவனங்கள் மற்றும் அரசு ஊழியர்களை குறைப்பு
உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.