தொழில் ரீதியில் செயல்படும் முச்சக்கர வண்டிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேல் மாகாணத்தில் தொழில் ரீதியில் செயல்படும் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கை செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தில் பதிவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.மேல் மாகாணத்தில் சுமார் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் முச்சக்கர வண்டிகள் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கு தேவையான நிவாரணத்தை வழங்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பிரசன்ன சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.