அரச ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பணி நீக்கப்படுவார்களா?
அரச சேவையில் எந்தவொரு கடமையுமின்றி, 100,000க்கும் அதிகமான ஊழியர்கள் இருப்பதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 16 இலட்சம் பேர் தற்போது அரசதுறை சேவையில் பணிபுரிந்து வருவதாகவும், அரச சேவையில் மூன்றில் ஒரு பகுதியினர் தொழிலாளர்கள், சாரதிகள் மற்றும் அலுவலக உதவிப் பணியாளர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரச சேவையில் குறிப்பிட்ட பதவியின்றி ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்கள் இருப்பதாகவும், தற்போதுள்ள அரச உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இல்லாவிட்டாலும் அரச சேவையை பேண முடியும் எனவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
வெளிநாடு செல்லும் அரச ஊழியர்களின் தகவல் கோரும் விண்ணப்பம் வௌியீடு
வெளிநாட்டு தொழிலுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு நிதியமைச்சின் அறிவித்தல்