வெளிநாட்டு தொழிலுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு நிதியமைச்சின் அறிவித்தல்
சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு நிதி அமைச்சு விசேட அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
சம்பமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள வங்கி அமைப்பின் மூலம் தமது பெயரில் உள்ள வெளிநாட்டு நாணயக் கணக்குக்கு அவர்கள் பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்லும் ஊழியர்களில் முதன்மை மட்ட அதிகாரிகள், 100 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை அதிகாரிகள் 200 அமெரிக்க டொலர்களும் அனுப்ப வேண்டும்.
மூன்றாம் நிலை அதிகாரிகள் 300 அமெரிக்க டொலர்களும், உயர் மட்ட அதிகாரிகள் 500 அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாகும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.