பயிலுநர் பட்டதாரிகள் தேர்வுப் பரீட்சையின் பின்னர் ஆசிரியர் சேவைக்கு
அண்மைக் காலங்களில் அரச சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட 53,000 பட்டதாரிகளில் கல்வித்துறைக்குள் ஈடுபடுத்தப்பட்டுள்ள 31,000 பட்டதாரிகளுக்கு தேர்வு பரீட்சை நடத்தப்பட்டு சிறந்த பெறுபேறுகளுடன் தகுதி பெறுவோர் மாத்திரம் ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்படுவாரக்ள் என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அப்பட்டதாரிகளுக்கு பட்டப்படிப்புக்கு மேலதிகமாக டிப்ளோமா பயிற்சியினூடாக வழங்கப்பட்டு கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சூரிய சக்தி தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.