அரச அதிகாரிகளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்புவதைத் துரிதப்படுத்த தீர்மானம்

அரச அதிகாரிகளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்புவதைத் துரிதப்படுத்த தீர்மானம்

 

அரச அதிகாரிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிப்பது, அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு திறம்பட அனுப்பும் செயல்முறையைத் துரிதப்படுத்துவது, இதனுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் அண்மையில் நடந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

அரச உத்தியோகத்தர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு அனுப்பும் முறைமையை, இலகுபடுத்தும் வகையில் 14/2022 ஆம் இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கையை திருத்துவது உட்பட 06 விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பொது நிர்வாக சுற்றறிக்கையை திருத்துவதன் மூலம், பணம் அனுப்புவதற்கு, வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (NRFC) அல்லது ரூபாய் கணக்கைப் பயன்படுத்த அனுமதிப்பது, விதவைகள், விதுரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்திற்கு கிடைக்கும் பங்களிப்புகளுக்கு அமைய , வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணைகளை செலுத்துவதற்காக அந்த பணத்தை தொடர்புபடுத்தும் முறையான நடைமுறைகளை நிறுவுதல் என்பன குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பொது நிர்வாகச் சுற்றறிக்கையை திருத்துவதன் மூலம் 03 மாதங்களுக்கு ஒரு முறையாவது பணத்தை அனுப்ப வாய்ப்பு காணப்படுவதோடு எமது நாட்டில் பணம் பற்று வைக்கப்படும் வகையில் அரச உத்தியோகத்தரின் பெயரில் கணக்கைத் திறக்கவோ, கூட்டுக் கணக்கைத் திறக்கவோ (Joint account) அல்லது பணம் அனுப்ப கணக்கொன்றை தெரிவு செய்யவோ அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image