ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருடன் உரையாடிய ஜனாதிபதி

ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருடன் உரையாடிய ஜனாதிபதி
ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தாமும் அவருடன் உரையாடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் உறுப்பினர்களுடன் நேற்று முன்தினம் (05) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்ந்து தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்பில் கலந்துரையாடி இருக்கின்றோம். ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் நானும் அவருடன் கதைத்தேன். நான் வினவியபோது தமது சட்டத்தரணிகள் உள்ளதாகவும், தம்மால் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் ஜோசப் ஸ்டாலின் கூறியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவரை எதிர்வரும் திங்கட்கிழமை விடுவித்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்படுவதாக சமன் ரத்னப்பிரிய எனக்கு தெரிவித்தார். சட்டத்தரணிகள் செல்வதால், எனக்கு தெரிகின்ற வகையில் நீதவான் சிலவேளை அதற்கு இணங்க முடியும். இன்னும் இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் நாங்கள் கலந்துரையாடுவோம். இதற்கு மேலதிகமாக தேவைப்பட்டால் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் உடனும் இது குறித்து கலந்துரையாடுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image