இலங்கையில் வேகமாக பரவும் ஒமிக்ரோன் திரிபு 

இலங்கையில் வேகமாக பரவும் ஒமிக்ரோன் திரிபு 

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபின் உப பிறழ்வு வேகமாகப் பரவி வருவதாகவும் நாட்டில் அது கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது என்றும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

​நேற்று 25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா மரணங்கள் மற்றும் தொற்றாளர் எண்ணிக்கையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டுமொரு கொரோனா அலை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அவசியமற்ற ஒன்று கூடல்கள் மற்றும் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தி, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

இதேவேளை, பொது இடங்களுக்குச் செல்லும்போதும் பயணத்தின்போதும் முகக்கவசத்தை அணிவது பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்ச்சியாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர் நேற்று (25) உயிரிழந்தனர் என்றும் இதுவரை 75 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 664, 975 ஆகும்.

உயிரிழந்த இருவரும் 60 வயதுக்கு மேற்பட்ட வயதுக்கு மே்றபட்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image