யாழ்ப்பாணம் பேருந்து சாலை ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

யாழ்ப்பாணம் பேருந்து சாலை ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண பேருந்து சாலையின் சகல பேருந்து ஊழியர்களும் இன்று இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



கடந்த 22ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துடனர் ஆகியோர் கல்கமுவ பேருந்துசாலை ஊழியர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்து இலங்கை போக்குவரத்து சபை, யாழ்ப்பாண பேருந்துசாலையின் சகல பஸ் சேவையாளர்களும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றைய தினமும் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்ட நிலையில் இதுவரை தாக்குதலை நடத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 22 ஆம் திகதி இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதலை நடத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாண மாவட்ட தனியார் பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்று (25) சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image