தனியார்துறையினருக்கு சம்பள அதிகரிப்பு!

தனியார்துறையினருக்கு சம்பள அதிகரிப்பு!

தனியார்துறை மற்றும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உறுதியளித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவுக்கேற்ற வகையில் தனியார்துறை ஊழியர்களுடைய ஆகக்குறைந்த சம்பளம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிக்கவும் அதற்கு அவசியமான சட்டங்களை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், நாம் புதிய முறைக்கு ஏற்றாற்போல் புதிய உலகுக்கு ஏற்ற தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தவும் தொழில் தரத்தை மேம்படுத்தவும் திட்டமொன்றை செயற்படுத்த நாம் சட்ட திட்டங்களை மாற்ற வேண்டும். ஆண் பெண் வேறுபாடு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை நாம் மாற்ற வேண்டும். ஆண் பெண் வேறுபாடின்றி செயற்படும் வேலை உலகத்தை நாம் உருவாக்க வேண்டும்.

புதிய உலகை கட்டியெழுப்பும் போது தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தொழிற்கல்வியை வழங்கவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டத்துடன் வாழ்கின்றனர் என்று அனைவரும் கூறுகின்றனர். இது நூற்றுக்கு நூறு உண்மை. உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருளை பெறுவதில் பெறும் சிரமம் நிலவுகிறது. அதனால் தனியார்துறை ஊழியர்களுக்கு ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் நாம் கலந்துரையாடல் நடத்தி வருகிறோம். அதற்கமைய எதிர்காலத்தில் ஆகக்குறைந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு தனியார்துறை ஊழியரக்ளுக்கு ஆகக்குறைந்த சம்பளத்தை உணரக்கூடிய வகையில் அதிகரிக்க முன்மொழியவுள்ளோம்.

இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி, தோட்டத் தொழிலாளர்களுக்கும் நல்ல சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்காக நாம் முன்னிற்போம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image