ஆசிரியர்களின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர்

ஆசிரியர்களின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர்

ஆசிரியர்களின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயத்த விளக்கமளித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

கொழும்பு நகரில் எரிபொருளுக்கு நீண்ட வரிசைகள் இருக்கின்றன. போக்குவரத்திற்கு பிரச்சினை இருக்கின்றது. மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலை இருக்கின்றது. எனவே கொழும்பு நகரம் உள்ளிட்ட ஏனைய சனநெரிசல் மிக்க பகுதிகள் உள்ளிட்ட ஏனைய நகரங்களிலும் உள்ள பாடசாலைகள் மாத்திரம் நாளை 20ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை பாடசாலை நடத்தாதிருக்கவும், அதற்கு பதிலாக நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் இணையத்தளம் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேநேரம், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி நேர அட்டவணையை உரிய முறையில் தயாரித்து கற்பித்தல் பணிகளை முன்னெடுக்கலாம். இதுபோன்ற கோரிக்கைகளை அதிபர்கள் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் கூறினார். மாணவர்களுக்காக இந்த ஐந்து நாட்களும் தவறவிடாமல் கற்றல் பணிகளை முன்னெடுக்க தயார் என அவர்கள் குறிப்பிட்டனர். இந்த நாட்டில் உள்ள அதிபர், ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்படும் ஐந்து நாட்களில் இணையதள முறைமையின் ஊடாக கற்பித்தலை முன்னெடுப்பதற்கு நாங்கள் அனைத்து அதிபர் மற்றும் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அதே நேரத்தில் கிராம பகுதிகளில் போக்குவரத்து பிரச்சினை இல்லாத பல பகுதிகள் இருக்கின்றன. குறிப்பாக 3,000 பாடசாலைகளில் பெரும்பாலானவை பஸ் மற்றும் வேன் போன்ற போக்குவரத்து முறைகளில் மாணவர்கள் செல்லாத கிராமங்களில் உள்ள சிறு பாடசாலைகள் அதாவது 200 இற்கும் குறைந்தளவான மாணவர்களைக்கொண்ட பாடசாலைகள் இருக்கின்றன. போக்குவரத்து பிரச்சினை இல்லாத பகுதிகளில் பாடசாலைகளை முன்னெடுப்பதில் எவ்வித பிரச்சனையும் இல்ல​ைஅது குறித்து அதிபர்கள் தீர்மானிக்க முடியும். இதில் வலயக்கல்விப் பணிமனை அறிவிக்க வேண்டியது மட்டுமே உள்ளது.

அப்படியான பாடசாலைகளுக்கு தூர பிரதேசங்களில் இருந்து செல்லும் சில ஆசிரியர்கள் இருப்பார்களாயின், அவர்கள் அந்த நாட்களில் பாடசாலைக்கு செல்வதற்கு போக்குவரத்து பிரச்சினை இருக்குமாயின், எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. ஏனெனில் அதிபர் ஆசிரியர்கள் செய்யும் இந்த சேவையானது நாங்கள் தன்னார்வ சேவையாகவே பார்க்கின்றோம். எனவே விடுமுறை தினம் தொடர்பான பிரச்சினையும் ஏற்படாது. இந்த அனைத்தையும் மறந்து இயன்றளவு அனைத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்க இந்த கடமையில் ஈடுபடுவார்கள் என்று நான் நினைக்கின்றேன் - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image