தற்போதைய நெருக்கடி நிலைமையில் சுகாதார ஊழியர்கள் எரிபொரளை பெற்றுக் கொள்வதற்கான விசேட பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் இதற்கென ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வெள்ளிக்கிழமை தோறும் சுகாதார ஊழியர்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஊழியர்களின் பதவி நிலையை உறுதிப்படுத்தி, கடிதத்தை வழங்குமாறு அமைச்சர் அனைத்து சுகாதார நிறுவனங்களின் தலைவர்களையும் பணித்துள்ளார்.
தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களின் விவரங்களும் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது