தொலைதொடர்பு வரியை 11.25 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வரிவிதிப்பானது இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இதனால் இன்று நள்ளிரவு தொடக்கம் அனைத்து தொலைபேசி கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் வற் வரி 8 வீதத்திலிருந்த 12 வீதமாக அதிகரிக்கப்படவதனால் தொலைபேசி கட்டணம் 8 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தொலைதொடர்பு வரியானது ஏனைய இணைய கட்டணங்களுக்கு பொருந்தாது என்றும் வற் வரி அதிகரிப்புக்கமைய இணைய கட்டணங்கள் 4 வீதத்தனினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.