பரீட்சார்த்திகள் - பணிக்குழாமினர் பரீட்சை மண்டபங்களுக்கு செல்ல விசேட நடவடிக்கை!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை பணிக்குழாமினர் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாலைகளில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பணிக்குழாமினரின் வாகனங்களுக்கான டீசலை விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வரிசைகளில் காத்திருக்காது நாடளாவிய ரீதியாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களை கோரியுள்ளார்.
பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் உரிய தொடருந்து சேவைகள் இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
கேஸ் விநியோக தகவல்களை விரைவில் பெற்றுக்கொள்ள விசேட செயலி
ஐ.நா அலுவலகத்தில் தொழிற்சங்க - வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் கடிதம் கையளிப்பு!