வேலைநிறுத்தம் முடிந்துவிட்டதா? இல்லையா? ஜோசப் ஸ்டாலின் விளக்கம்
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் மற்றும் வெகுஜன் அமைப்புக்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் நாங்கள் இன்று (11) இந்த ஊடக சந்திப்பை நடத்துகின்றோமைஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதவி விலகும் வரையில் நாங்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுப்போம். இந்த வேலைநிறுத்தத்தை ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாங்கள் முன்னெடுத்தோம். இதற்கமைய நாங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தோம். முன்னதாக இந்த ஊரடங்கு சட்டத்திற்கு மத்தியில் நாங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்த போதிலும், அதனை முன்னெடுக்க முடியாத நிலை இருந்தது. நாங்கள் எங்களுடைய வேலைநிறுத்தத்தை நடைமுறைப் படுத்துவோமம். ஒருபுறத்தில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் என்ற அடிப்படையில் கல்வி துறையில் நாங்கள் பாடசாலைகளில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தோம். இதுகுறித்து நாங்கள் கல்வியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தோம்.
இந்த நிலைமைக்கு மத்தியில் இன்று (11) எம்முடன் கலந்துரையாடல் நடத்தாமல் தொழிற்சங்க மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அவர்கள் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஒரு முரண்பாடான நிலை ஏற்படுத்தி இருக்கின்றது. வேலைநிறுத்தம் இடம்பெறுகின்றதா? இல்லையா? என்கின்ற ஒரு விடயம் இருக்கின்றது.
தொழிற்சங்க மத்திய நிலையம் இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதில்லை என்று அறிவித்திருந்தது. நாங்கள் நாளைய தினம் (இன்று 12) இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதுடன், நிலைமைகளை அவதானித்து அடுத்த கட்ட அறிவித்தலை வெளியிடுவோம். நாங்கள் தற்போது வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவில்லை. வேலை செய்யும் தரப்பினருக்கு இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எனவே இந்த முரண்பாடான நிலைமையே அவர்களுடன் பேசி தீர்க்க வேண்டும். இந்த நிலையில் நாளைய தினம் (12) நாங்கள் தெளிவான ஒரு அறிவித்தலை வெளியிடுவோம் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பணிப்பகிஷ்கரிப்பைத் தொடர அகில இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தீர்மானம்
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அலுவலர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பை தொடர தீர்மானம்!
பணிப்பகிஷ்கரிப்புத் தொடரும்- முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம்!