பணிப்பகிஷ்கரிப்பைத் தொடர அகில இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தீர்மானம்
அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களின் மீது அரச தரப்புக் குண்டர்களை பயன்படுத்தி நடத்திய தாக்குதல் மற்றும் ஜனாநாயகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து மக்களுக்காகவும் அமைதியான முறையில் போராட்டதில் ஈடுபட்ட பொது மக்கள் அரச குண்டர்களை பயன்படு மீது நடத்தப்பட்ட இம்மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு முதலில் வெறுப்புடன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த குண்டர் தாக்குதலுக்கும், தாக்குதலுக்கு உதவியவர்களுக்கு எதிராக உடனடியாக கைது செய்து சட்டத்தை அமுல்படுத்தக் கோரி 2022 மே 10 முதல் மறுஅறிவித்தல் வரை, தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த நமது சங்கத்தின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டத்தை அமல்படுத்தாததற்கும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று அகில இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அநுராத செனவிரத்ன வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.