எரிபொருள் விநியோகம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விசேட அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில்  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்கு சட்டம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம், பாதுகாப்புக்கு மத்தியில், எரிபொருளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், கொள்கலன் தாங்கி ஊர்திகள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சென்றபோதும், எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லையென அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நாளை (12) காலை 7 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்ட போதிலும் பல பகுதிகளில் அவ்வப்போது வன்முறைகளும் அமைதியின்மையும் பதிவாகி வருகின்றன.

இலங்கையில் ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருகின்ற வேளையில், இவ்வாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளது.

சூரியன் செய்திகள்

மேலும் செய்திகள்

வேலைநிறுத்தம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் சாத்தியம்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image