ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் சாத்தியம்

ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் சாத்தியம்

மின்சார சபைக்கு தேவையான எரிபொருள் கிடைக்காவிடின், எதிர்வரும் நாட்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை ஏழரை மணித்தியாலங்களாக நீடிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ந்தும் இலங்கை மின்சார சபையினால் கோரிக்கை விடுக்கப்படுகின்ற போதிலும், இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என பொறியிலாளர் சங்கத்தின் இணை செயலாளர் எரங்க குடாஹேவா கூறியுள்ளார்.

இன்றும் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், மின்சாரத்திற்கான கேள்வி குறைடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் கூறியுள்ளது.

எரிபொருள் கிடைக்காவிடின், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதும், பகல் வேளையில் 5 மணித்தியாலங்களும், இரவு வேளையில் இரண்டரை மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் சாத்தியமுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் இணை செயலாளர் எரங்க குடாஹேவா குறிப்பிட்டுள்ளார்.

நியூஸ்பெஸ்ட்

தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image