வேலைநிறுத்தம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

வேலைநிறுத்தம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில், தொழிற்சங்கங்கள் இன்று விசேட அறிவித்தலை விடுத்துள்ளன.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றுடன் (புதன்கிழமை) முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு அராஜக பாதையில் செல்வதற்கு இடமளிக்க முடியாது என்றும், இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

ஏழரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் சாத்தியம்

May be an image of 8 people, people sitting and people standing

No photo description available.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image