அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால், விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழலில், அரசின் வருவாயை அதிகரிக்க காலம் எடுக்கும் என்பதால், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படும் வகையில், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கiயில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, எரிபொருள் மற்றும் தகவல் தொடர்பு கொடுப்பனவுகளை செலுத்துவதை கட்டுப்படுத்தவும், நீர் மற்றும் மின்சாரத்திற்கான செலவீனங்களை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை நியமிக்கப்படாத பதவிகளுக்கான ஆட்சேர்ப்புகள் பிற்போடப்பட்டுள்ளதுடன், பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கடன் வசதிகள் இந்த ஆண்டு இறுதி வரை இடைநிறுத்தப்படுவதாக நிதி அமைச்சின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.