அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு கல்வியியற் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கான கொடுப்பனவை 10,000 ரூபா வரை அதிகரிக்குமாறு கல்வி சாரா ஊழியர் சங்கம் ஊழியர்கள் சங்கம் கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரோவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய கல்வியியற் கல்லூரியை ஒரு வாரத்திற்கு மூடி உணவு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது என்று அச்சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தங்கி கற்கும் மாணவர்களுக்கு உணவுக்காக அரசாங்கம் 5000 ரூபா வழங்குகிறது. அதில் 200 ரூபா மாணவர் நலன்புரிக்காக அறவிடப்படுகிறது. மிகுதி 4,800 ரூபா மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு மாணவருக்கு மூன்று நேர உணவுக்காக ஒரு நாளைக்கு 160 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போதுள்ள விலைவாசி காரணமாக அந்த பணத்திற்கு ஒரு கிலோ அரிசிகூட வாங்க முடியாதுள்ளது என்று திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.