அமைதியான போராட்டத்தை சீர்குழைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தொழிற்சங்கம் கண்டனம்!

அமைதியான போராட்டத்தை சீர்குழைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தொழிற்சங்கம் கண்டனம்!

காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் போராட்டத்தினை தடுக்க அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளையும் வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் ஊழியர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்றுமுன்தினம் (16) ஜனாதிபதி செயலகத்தின் அருகில் பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தமையானது கடந்த 7 நாட்களும் இளைஞர்கள் அமைதியாக முன்னெடுத்த போராட்டத்தை சீர்குழைக்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயலாகும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகப்பூர்வமாகவும் ஏனைய அமைப்புக்கள் அரசின் இச்செயலுக்கு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தமையைடுத்து அப்பொலிஸ் வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டமை தெரியவந்துள்ளது.

அனைத்து குடிமகனும் தனியாக மற்றும் ஒன்றுமையாக கருத்து வௌியிட உள்ள உரிமை, பாதுகாக்க கடமைப்பட்டுள்ளதாக பாராளுமன்றில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அரசியலமைப்பின் உள்ளடங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அவ்வுரிமையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தீர்மானிப்பது கருத்து தெரிவிக்க கலந்துகொள்ளும் குடிமகனின் கைகளில் உள்ளது. அதனை போராட்டமாக வௌியிடும் உரிமையும் அவர்களுக்குள்ளது. வாக்குகளினால் நியமிக்கப்பட்ட அரசாங்கத்தின் அதன் செயற்பாடு மக்கள் விரோதமானது மற்றும் அதனை பதவி விலகவேண்டும் என்று கூறவும் உரிமை உள்ளது.

அதனால் காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை தடை செய்ய அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் இல்லை. எனவே அப்போராட்டத்தை தடை செய்ய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளையும் சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் ஊழியர்கள் சங்கம் எவ்வித நிபந்தனைகளுமின்றி வன்மையாக கண்டிக்கிறது. அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் அதற்கு முழுமையாக எதிர்க்க அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒற்றுமையாக முன்வரவேண்டும் என்று கோருகிறோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image