இளம் மூளைச்சாலிகளின் வௌியேற்றத்தினால் பாதிக்கப்படும் தனியார்துறை

இளம் மூளைச்சாலிகளின் வௌியேற்றத்தினால் பாதிக்கப்படும் தனியார்துறை

திறமையான இளைஞர் யுவதிகள் வௌிநாடு செல்வதில் ஆர்வம் காட்டுவதால் தனியார் நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை தக்க வைத்துக்கொள்வதில் கடுமையான சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னணி பல்தேசிய நிறுவனத்தின் தலைவர் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இக்கருத்தினை வௌியிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், முதுகலை பட்டப்படிப்பு போன்ற உயர்கல்வி தகமைகளைக் கொண்டவர்கள் வௌிநாடு செல்வதில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் நாட்டின் மூளைசாலிகள் வௌியேற்றப்படுகின்றனர்.இச்செயற்பாடானது பண வீக்கம் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு நாட்டை இட்டுச்செல்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு நாட்டுடன் போட்டியிடும் போது சவாலை தக்கவைத்துக்கொள்வது இதனால் பெரும் சவாலாக அமைந்துள்ளது. இப்போது, மிகவும் திறமையான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை நீங்களும் காண்கிறீர்கள். மக்கள் தங்களின் நிதிக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, தங்களின் தொழில் ஆசைக்குள் இல்லாமல், முற்றிலும் நிதிப் பலன்களுக்காக, வரும் எந்த வாய்ப்பையும் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். திறமைக்காக போட்டியிடுவது அல்லது தக்கவைத்துக்கொள்வது இனி நிர்வகிக்க எளிதானது அல்ல. தக்கவைப்பது இப்போது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது,” என்று கடந்த வாரம் கொழும்பில் ஐ.நா பெண்கள் ஏற்பாடு செய்திருந்த குழு விவாதத்தில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிர்வாக இயக்குனர்/குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் கூறினார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, இந்த வருடத்தில் இதுவரை 161,394 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் 42 சதவீதமாகும்.

முன்னணி தொழில் பொருளாதார நிபுணர் கலாநிதி ரமணி குணதிலக்க கருத்து வௌியிடுகையில், வேலைவாய்ப்புகளின் தரத்தை மேம்படுத்துவதில் ஸ்தம்பித நிலையே இளைஞர்களின் இடம்பெயர்வுக்கு பிரதான காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“மிக நீண்ட காலமாக வேலைகளின் தரம் மேம்படவில்லை. அதுவே மூளைச்சாலிகள் வௌியேற்றத்திற்கு பிரதான காரணம். 1990 களில் நாட்டில் ஏற்பட்ட தாராளமயமாக்கலின் இரண்டாவது அலைக்குப் பிறகு, பொருளாதாரத்தில் எந்தவொரு தீவிரமான சீர்திருத்தங்களும் நடைபெறுவதை நாங்கள் காணவில்லை, ”என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

நான்காவது தொழிற்புரட்சியை (IR 4.0) வரவேற்பதாக நாட்டில் பலர் அடிக்கடி பேசினாலும், உண்மையில் பொருளாதாரத்தின் பெரும்பகுதி இன்னும் மூன்றாம் தொழில் புரட்சியை அடையவில்லை என முன்னணி தொழில்துறை பொருளாதார நிபுணர் பேராசிரியர் சுனில் சந்திரசிறி கருத்து தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image