அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் ஆசிரியராகும் வாய்ப்பு!

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் ஆசிரியராகும் வாய்ப்பு!

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளில் 22,000 இற்கும் அதிகமானவர்களை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் அதற்காக அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

உயர்கல்விக்காக மாணவர்கள் செலவிடும் காலப்பகுதியில் ஒரு வருடம் வரையில் குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய இனிவரும் காலங்களில் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே ஜனாதிபதி தலைமையிலான அரசு பல்கலைக்கழகங்களில் சுமார் 50,000 மாணவர்கள் கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக்குதே தமது நோக்கம் என்றும் மாணவர்களுக்கு மாத்திரமன்றி அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் தகவல் தொழில்நுட்ப அறிவை ஏற்படுத்துவது தமது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.

 

பல்கலைக்கழகத்தில் இருந்து வௌியேறும் மாணவர்கள் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றிருத்தல் அவசியம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாய்மொழிக்கு மேலதிகமாக பாடசாலைகளில் ஆங்கிலத்தை தொடர்ச்சியாக கற்பிப்பதற்கு புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த வாரம் பாராளுமன்றில் இடம்பெற்ற உபகுழுக் கூட்டத்தில் மேற்படி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வௌியியேறும் போதனாசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்களின் தரம் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு பட்டப்படிப்பை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கா மிரர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image