இன்று நள்ளிரவு முதல் ஆகக்குறைந்த பஸ் கட்டணத்தை 2 அல்லது 3 ரூபாவினால் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும் இடையே நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை இன்றைய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்;டு;, அது தொடர்பில், தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக, ஆகக்குறைந்த பஸ் கட்டணத்தை 30 ரூபாவாக அதிகரிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இதேநேரம், ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணத்திற்கு இணையாக, ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவை பட்டதாரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ள இடங்களின் விபரம்
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு: வெட்டுப்புள்ளி விபரம்