பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரிக்கை

பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரிக்கை

அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயிலுநர் பட்டதாரிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்கின்றன. இதற்கு ஏற்றவாறு ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரித்திருக்கின்றன. எனினும் அரச ஊழியர்களுக்கு நியாயமான சம்பளமும் கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை.

எனவே, எமது போராட்டத்தின் ஒரு கோரிக்கையாக தற்போது வழங்கப்படுகின்ற போக்குவரத்து கொடுப்பனவை தற்போதைய சந்தை நிலைமைக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும்.

எங்களுக்கு நீக்கப்பட்டுள்ள கணினி கொடுப்பனவு, மொழி கொடுப்பனவு மற்றும் தொடர்பாடல் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியஆராயச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பும் டொலருக்கான கொடுப்பனவை அதிகரிக்க முடிவு

மகளிர் தினத்தை முன்னிட்டு 'e-diriya' செயலி அறிமுகம்!

ஒருமித்த குரலாய் ஒலித்தாலே உரிமைகளை வென்றெடுக்கலாம்!

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image