பெருந்தோட்டங்களில் தொழிற்சட்டங்கள் முற்று முழுதாக மீறப்படுகின்றன- பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார்

பெருந்தோட்டங்களில் தொழிற்சட்டங்கள் முற்று முழுதாக மீறப்படுகின்றன- பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார்

பெருந்தோட்டங்களில் தொழிற்சட்டங்கள் முற்று முழுவதாக மீறப்பட்டுக் கொண்டிருப்பதுடன், தொழிலாளர்கள் உதாசீனம் செய்யப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

துளை- செல்வக்கந்த பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு மின்சார வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அவர்களது தினச் சம்பளத்திலும், சட்ட விரோதமான பல்வேறு நிபந்தனைகள் புகுத்தப்பட்டுள்ளமை போன்ற தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை, அனுதிக்க முடியாது.

தற்போது கூட்டு ஒப்பந்தம் பற்றி பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இக் கூட்டு ஒப்பந்தத்திற்கு நான் எதிரானவனல்ல. ஆனால், அவ் ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். தொழிலாளர்களது மேம்பாடுகள், சேமநலன்கள், சம்பள உயர்வுகள், உரிமைகள் என்ற ரீதியில், தொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில், ஒப்பந்த சரத்துக்கள் அமையாவிட்டால் அவ் ஒப்பந்தத்தில் பயன் கிடையாது.

தொழில் துறையொன்றிற்கு ஒப்பந்தம் ஒன்று இருக்க வேண்டியது அவசியமாகும். அது எவ்வாறானதொரு பெயராகவும் இருக்கலாம். ஆனால், அவ் ஒப்பந்தம் பக்கம் சார்ந்ததாக இருந்துவிடக்கூடாது. தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படல் வேண்டும். இது விடயத்தில், தான் மிகுந்த கவனத்தைச் செலுத்துவேன்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் பொறுமையாக இருந்து விட மாட்டார்கள். அவர்களது பொறுமையை சோதனையிடக்கூடாது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் கருத்து வௌியிட்டிருந்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image