யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க அங்கத்தினர் இன்று (10) அடையாள வேலைநிறுத்தப்போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவினால் 26.01.2022இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் மேற்படி அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இலங்கையில் உள்ள சகல அரச பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்பட்டது.
2016/17 இந்த சுற்று நிருபத்தின் பிரகாரம் அரசாங்க ஊழியர்களுக்கு 106-109% அதிகரிப்பும், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு 90-92% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்2020இல் அடிப்படைச் சம்பளத்தில் 15 வீதம் இழப்பு என்பவற்றைச் சுட்டிக்காட்டி இவ்வடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார வழிமுறைகள் பின்பற்றி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
நாட்டின் அனைத்து பல்கழகங்களிலும் முன்னெடுக்கப்பட்டது என்றும் இந்த போராட்டம் காரணமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த பரீட்சைகள் மற்றும் கூட்டங்களும் ஒத்தி வைக்கப்பட்டன என்றும் சங்கத்தின் தலைவர் த. சிவரூபன் தெரிவித்துள்ளார்
முற்பகல் 11.00 மணிளயவில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் ஊழியர் சங்கப் பொது அறையில் பணியாளர்களுக்கு விளக்க கூட்டம் ஒன்று நடாத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து 11.45 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வாசலில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.