கோரிக்கைகளுக்கு உரிய பதிலில்லை- மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம்
தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போராட்டததை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் மற்றும் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம் ஆகிய தீர்மானித்துள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் 14ம் திகதி இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
- அரச மற்றும் மாகாண அரச சேவைகளில் MN-04 சம்பள நிலையுடைய பட்டதாரிகளுடைய அடிப்படை சம்பளம் சம்பள அதிகரிப்பு கல்வித் தகமைக்கமைவாக அதிகரித்தல் மற்றும் 06/2006, 3/ 2016 சம்பள முரண்பாட்டை தீர்த்தல்MN -05 சம்பள நிலையை பெரும் வகையில் பதவியுயர்வுக்கான திட்டமொன்றை உடனடியாக உருவாக்குதல்
- தர பதவியுயர்வுக்காக இருந்த விசேட செயலணி மதிப்பீட்டு முறையை உடனடியாக செயற்படுத்துதல்
- சம்பள நிலை வளர்ச்சி, பதவியுயர்வு, விசேட செயலணி மதிப்பீடு, முறையான பயிற்சி உட்பட அனைது உரிமைகளும் உள்ளடக்கப்பட்ட சேவை யாப்பினை உருவாக்குதல்
- 2016ம் ஆண்டு தொடக்கம் ரத்து செய்யப்பட்ட அரச ஊழியர்களுக்கான முழுமையான ஓய்வூதிய உரிமையை கடிதம் மூலம் உறுதிப்படுத்தல்
- தற்போதைய போக்குவரத்து கொடுப்பனவை அதிகரித்தல் மற்றும் மொழி, கணனி, எரிபொருள், தொலைபேசி மற்றும் தரவு கொடுப்பனவை பெற்றுக்கொடுத்தல்
- பட்டதாரிகளை சேவையில் இணைக்கும் போது அமைச்சு, திணைக்களம் மற்றும் நிறுவன துறைகளுக்கு பொருத்தமான பட்டப்படிப்புடையவர்களை முறையாக இணைத்துக்கொள்ளும் செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துதல்
- பொருளாதார அபிவிருத்தி அதிகாரி பதவியை திணைக்களத்தில் உருவாக்குதல்.
ஆகிய கோரிக்கைகள் முன்வைத்து இவ்வொருநாள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.