ஐந்தாயிரம் கொடுப்பனவு எமக்கும் வேண்டும் - ஆடை தொழிற்சாலை ஊழியர்கள்!
வருகைக் கொடுப்பனவு 4000 ரூபாவை ஒரே தடவையில் நிறுத்தப்பட்டமை மற்றும் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள 5000 ரூபா கொடுப்பனவை தமக்கு வழங்குமாறு கோரி அநுராதபுரம் பிரதேசத்தில் அமைந்நுள்ள ஆடை உற்பத்திச் தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று (02) போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
அநுராதபுரம், பண்டுலுகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை உற்பத்தித் தொழிற்சாலை ஊழியர்களே தமது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பௌர்ணமி தினத்திலும் தாம் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள் குறித்து எவ்வித கவனமும் எடுக்கப்படுவதில்லை என்றும் அவ்வூழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எமது கொடுப்பனவு நிறுத்தப்பட்டமையினாலேயே இன்று நாம் வீதிக்கு இறங்கியுள்ளோம். அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவை எம்மைப்போன்ற அப்பாவி தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுவதை விடுத்து இதுவரை வழங்கப்பட்ட வரவுக்கான கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளது. எமது சம்பளத்தை ஒன்பதாயிரத்தால் அதிகரிக்கப்படவேண்டும். பௌர்ணமி தினத்தில் சேவை பெறுவதை நிறுத்தவேண்டும் என்பனவே எமது கோரிக்கைகள் ஆகும்.
நாட்டில் கொவிட் அதிகரித்திருந்த காலப்பகுதியில் அதிகம் சேவையாற்றி நாட்டுக்கு டொலர் பெறுவதற்கு நாம் உதவினோம். எனினும் அப்பாவித் தொழிலாளர்கள் கொவிட் தொற்றுக்குள்ளானபோது பொருட்கள் பொதியினை வழங்க கூட வழங்க ஒருவருமில்லை. குறைந்தது நிருவாக அதிகாரி தொலைபேசியில் தொடர்புகொண்டு எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரிக்கவில்லை. எம்மை போன்று அப்பாவிகளுக்கு ஏன் இப்படி செய்கீறீர்கள்? என்று ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
போராட்டத்தின் பின்னர் போராட்டக்காரர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.