நிரந்தர நியமன பெயர் பட்டியலில் இடம்பெறாத பயிலுநர் பட்டதாரிகள் கவனத்திற்கு
பயிலுநர் பட்டதாரியாக தெரிவு செய்யப்பட்டு மாகாணசபையில் பயிற்சி பெற்று நிரந்தர நியமனத்திற்கான பெயர் பட்டியலில் பெயர் இடம்பெறாத பட்டதாரிகள் தொடர்பில் பொது சேவைகள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020/21 பட்டதாரிகள் ஒன்றியம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் எதிர்வரும் 10ம் திகதி காலை 10.00 மணிக்கு பொது சேவைகள் அமைச்சின் கவனத்திற்கு இவ்வியடம் தொடர்பில் கொண்டு செல்ல தீர்மானித்துள்ளமையினால் அன்றைய தினம் பெயர் பட்டியலில் இடம்பெறாத பயிலுநர் பட்டதாரிகளையும் அவ்விடத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் பெயர் பட்டியலில் இடம்பெறாத பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் பயிற்சி பெற்ற நிறுவனம் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்ட, ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட கடிதம் மற்றும் அதன் பிரதியுடன் வருகைத்தருமாறு கோரப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு மகேஷ் - 071 39 23 194, புத்திக்க - 071 -155 1734 ஆகியோருடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.