2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் அரச நிர்வாகத்துறையில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படுமென உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி கடந்த இரண்டு வருடங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டாத சுமார் 40 அரச நிறுவனங்களின் தலைவர்கள் நீக்கப்பட்டு புதிய தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதில் பல அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அதிகாரசபைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பல அமைச்சுகளின் செயலாளர்கள் மாற்றப்படவுள்ளனர்.
அமைச்சுகளின் செயலாளர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாதுள்ளதாக பல அமைச்சர்கள் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, மூன்று அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எதிராக அதற்குப் பொறுப்பான அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு தேவையான மாற்றங்களை ஜனாதிபதி மேற்கொள்வார் என உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம் - தமிழன் செய்திகள்