பயிலுநர்களுக்கு சொந்த மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நியமனம்
பயிலுநர் பட்டதாரிகளுக்கு தங்களது சொந்த மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நியமனம் வழங்கும் நிலைமை ஒன்றும் காணப்படுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மத்திய நிலையத்தின் பிரதான செயலாளர் சந்ததன சூரிய ஆராய்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
தற்போது மாவட்டங்களுக்கு ஆட்சேர்க்கப்பட்டுள்ள பயிலுநர் பட்டதாரிகளை நிரந்தரமாக்கும்போது, குறித்த மாவட்டங்களில் வெற்றிடங்கள் போதுமான அளவு இல்லாத சந்தர்ப்பங்களில், அதற்கு அருகிலுள்ள மாவட்டங்களில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கை ஒன்றும் தற்போதைய நாட்களில் இடம்பெறுகின்றது.
நாம் இது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கின்றோம். குறிப்பாக குறித்த மாவட்டங்களில் எமது சேவைக்கு அமைவான வெற்றிடங்கள் இல்லாவிட்டால், அந்த மாவட்டங்களில் அவர்களைத் தக்க வைத்திருப்பது தொடர்பில் பிரச்சினை ஏற்படுவதுடன், சட்ட ரீதியான மற்றும் சம்பளத்தை ஒதுக்குவது தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதற்கமைய அந்த மாவட்டத்திற்கு அருகிலுள்ள மாவட்டங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான நடவடிக்கை ஒன்று இடம்பெறுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தெரியக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த நியமனங்களை நிரந்தரமாக்குகின்றபோது கிடைக்கின்ற பணியிடம் தொடர்பில் ஏதாவது அசௌகரிய நிலை ஏற்படுமாயின், அதனை மாற்றுவதற்கான இயலுமை தொடர்பில் குறிப்பாக இந்த சந்தர்ப்பத்தில் அவதானம் செலுத்துகின்றோம்.
இதற்கமைய அந்த பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதன் பின்னர் ஃ நியமனத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் அது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் தரப்பில் அவதானம் செலுத்தப்படும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மத்திய நிலையத்தின் பிரதான செயலாளர் சந்ததன சூரிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.