மலையக பாடசாலைளில் உதவி ஆசிரியர்களாக பணியாற்றும் அனைவருக்கும் எதிர்வரும் 15ம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுக்கோளையடுத்து ஆசிரியர் உதவியாளராக சேவையாற்றி வந்த அனைவருக்கும் நியமனங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் காலத்தில் சகல உதவி ஆசிரியர்களுக்கும் நியமனங்களை பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான வலியுறுத்தியிருந்த நிலையில் அனைவருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. எஞ்சியவர்களுக்கு எதிர்வரும் 15ம் திகதி வழங்கப்படும்.
கடந்த காலங்களில் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஆராயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபா ஊதியத்தில் மிக கஷ்டமான நிலையிலே சேவையாற்றி வந்துள்ளனர். அந்த வகையில் அவர்களுடைய பிரச்சினைகளை காலத்திற்கு காலம் எடுத்துச் சென்று வலியுருத்தியமையினால் சிறிது சிறிதாக நியமனங்களை வழங்கப்பட்டிருந்தன. இன்னும் சில ஆசிரியர் உதவியாளர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகாத நிலையில் அவர்களின் பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட்டு அவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.