பிரச்சினைகளுக்கு தீர்வின்றேல் எடுக்கப்படும் நடவடிக்கை: நுவரெலியா விவசாயிகள் எச்சரிக்கை
நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள்,மரக்கறி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக நேற்று (21) காலை நுவரெலியா நகரின் மத்தியில் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பிரதேச விவசாயிகளுடன் இணைந்து தேரர்களும் இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நுவரெலியா மற்றும் கந்தப்பளை நகரங்களில் வர்த்தகர்கள் தங்களது வியாபார நிலையங்கள் மூடி ஆதரவினை வழங்கினர்.
மேலும் இராகலை நகரில் கருப்பு கொடிகளை பறக்கவிட்டு மரக்கறி கொள்வனவாளர்கள் தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
மரக்கறி விவசாயிகள்,வர்த்தகர்கள்,மற்று
நகரில் எவ்வித பதற்றமும் ஏற்படாத நிலையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தை சாதாரண விலைக்கு வழங்க வேண்டும், பூச்சிக்கொல்லிகளை வழங்க வேண்டும், நியாயமான விலையில் திரவ உரத்தை வழங்க வேண்டும், உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்படி பிரச்சினைகளுக்கு ஒரு வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், தற்போது பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளை சந்தைக்கு விடுவிப்பதில்லை என்று ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார வலய மத்திய நிலையங்களின் சங்க தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்குமாறு கோரி நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவிடம் கையளித்தனர். இந்த போராட்டம் காரணமாக பல மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேசத்தில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட மலையக மரக்கறிகள் இன்று (21) சந்தைக்கு கிடைக்காமையால் சந்தையில் மலையகம் உள்ளிட்ட மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலைகள் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.