தொழில் வழங்கும் திட்டத்தில் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் முறைப்பாடு
2020ம் ஆண்டு தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரி ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று (15) மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
60,000 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டத்தின் கீழ் ETF,EPF பிரச்சினை, பல்கலைக்கழகத்தில் பெறுபேறுகள் வௌியாவதில் இருந்த தாமதங்கள் போன்ற காரணங்களினால் வாய்ப்பினை இழந்த பட்டதாரிகள் விபரம் கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி பொது சேவைகள், மாகாணசபைகள்மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சிற்கு கையளிக்கப்பட்டபோதிலும் அதற்கு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்ய ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொஸ்வத்த மஹாநாம தேரர் மற்றும் ஒன்றிணைந்த வேலையற்ற படடதாரிகள் மத்திய நிலையத்தின் மேல் மாகாண அமைப்பாளர் மலிந்த ஜீவன் ஆகியோர் இம்முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.