அரசாங்க சேவை சம்பளங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகளை அகற்றுவதன் மூலம் அரசாங்க சேவைக்கான புதிய சம்பளக் கட்டமைப்பு ஒன்றினை நிறுவுவதற்கு நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.
2020ம் ஆண்டுக்கான பாதீட்டு உரையில் அவர் இதனை முன்மொழிந்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முரண்பாடுகளை இல்லாதொழித்து, அரசாங்க சேவையின் சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பில் திருத்தங்களைக் கொண்டுவருவதும் சம்பள கட்டமைப்புகளைத் தாபிப்பதும் தேசிய சம்பள ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்பதை நான் மீளவும் வலியுறுத்துகின்றேன். அத்தகைய நிறுவனங்கள் பொதுவான கட்டமைப்பிலிருந்து விலகும் போது சம்பளக் கட்டமைப்பினுள் வேண்டாத சம்பள அளவுத்திட்டங்களும் முறைகேடுகளும் புதிதாகத் தோற்றுவிக்கப்படுகின்றன. என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனால், அடுத்த நிதியாண்டு தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் அரசாங்க சேவை சம்பளங்களில் காணப்படுகின்ற முரண்பாடுகளை அகற்றுவதன் மூலம் அரசாங்க சேவைக்கான புதிய சம்பளக் கட்டமைப்பு ஒன்றினை நிறுவுவதற்கு நான் முன்மொழிகின்றேன்.
ஒழுக்காற்றுநடைமுறையின் கீழ் உட்படுத்த்பட்டுள்ளவர்கள் தவிர, அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் மதிப்பீட்டு அறிக்கைகளின் தேவையின்றி சம்பள ஏற்றத்திகதியன்று சம்பள ஏற்றத்தினை வழங்குவதன் மூலம் சம்பள நிர்வாக நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படவுள்ளன. – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.