ஆசிரியர் - அதிபர் போராட்டம் இடைநிறுத்தம்: அரசாங்கத்துக்கு காலக்கெடு விதிப்பு
ஆசிரிய - அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
அனைத்து தொழிற்சங்கங்களும் கொழும்பில் நேற்று (14) கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி சுமார் 3 மாதங்களுக்கும் அதிக காலம் அதிபர் - ஆசிரியர்கள், தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்குவதற்கு அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் 30 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் தற்காலிகமாக தமது தொழிற்சங்க போராட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விளக்கமளிக்கும் காணொளி மேலே இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பிலும் அதனைக் காணலாம்