கொவிட் பரவலை கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்தும் வைத்துக்கொள்வதற்கு வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை முன்னெடுப்பது சிறந்தது என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவி விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாரம் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை என்பன அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலையில் தொடர்ந்தும் நாட்டை முடக்க முடியாது என்றபோதிலும் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நோய் பரவல் முற்றாக முடிவுக்கு வந்துள்ளதாக எந்த காரணம் கொண்டும் நினைக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.