நாளை சமூகமளிக்காத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்படும்!

நாளை சமூகமளிக்காத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்படும்!

எதிர்வரும் 21ம் திகதிக்கு பின்னர் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காக ஊவா மாகாண அதிபர் ஆசிரியர்களுடைய சம்பளம் நிறுத்தப்படும் என்று மாகாண ஆளுநர் ராஜா கொள்ளூரேல தெரிவித்துள்ளார்.

ஆளுநர் என்றவகையில் கல்வி அமைச்சருடைய அதிகாரத்தை பயன்படுத்தும் கடமையுள்ள நபர் என்ற வகையில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்காதவர்களுடைய நவம்பர் மாத சம்பளத்தை நிறுத்துவதுடன் 25ம் திகதிக்கு பிறகு பாடசாலைகளுக்கு சமூகமளிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் பாடசாலைக்குள் நுழைய இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தளுள்ளார்.

சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி அதிபர் ஆசிரியர் சங்கங்கள் ஒன்லைன் கற்பித்தலை நிறுத்தியதனூடாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது நூறு நாளை கடந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய ஒன்றியம் கல்வியமைச்சர் கபில பெரேராவை சந்தித்து மனுவொன்றையும் கையளித்துள்ளது.

அதில் தமது கோரிக்கை நிறைவேற்றும் வரை கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் நேற்றையதினம் (19) நாளையும் (21) நாளை மறுதினமும் (22) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாகவும் 25ம் திகதி தொடக்கம் பாடசாலைக்கு சமூகமளித்து கற்பித்தல் செயற்பாட்டில் மாத்திரம் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image