பாடசாலைகளில் இணைக்கப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

பாடசாலைகளில் இணைக்கப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

 பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு கல்வி அமைச்சில் உள்வாங்கப்பட்ட அனைத்து 18,000 பயிலுநர் பட்டதாரிகளும் தாங்கள் பணியாற்றும் பள்ளிகளுக்கு கட்டாயமாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

சிலோன் டுடே பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகள் 58,000 பேர் பயிலுநர்களாக அரச சேவையில் இணைக்கப்பட்டனர். அவர்களில் 18,000 பேர் கல்வியமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுதல் ஆகியவற்றின் அடிப்படையில் பாடசாலைகளை மீண்டும் திறக்க ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் திட்டமிட்டப்படி படிப்படியாக பாடசாலைகள் திறக்கப்படும்.

இதற்கமைய, கல்வியமைச்சின் பரிந்துரையின் கீழ் பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்ட அனைத்து பயிலுநர் பட்டதாரிகளும் ஒக்டோபர் மாதம் 21ம் திகதி தமது பணிக்கு சமூகமளிப்பது கட்டாயமாகும் என்றும் பொதுச்சேவைகள் அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image