புதிய டெல்டா உப பிறழ்விற்கு பெயரிடப்பட்டுள்ளது

புதிய டெல்டா உப பிறழ்விற்கு பெயரிடப்பட்டுள்ளது

நாட்டில் பரவி வரும் டெல்டா பிறழ்வின் உப பிறழ்வு உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புதிய பிறழ்வு AY.28 என பெயரிடப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ
பீடத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, நிர்ப்பீடனம், உயிரணு கற்கை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது 701S எனும் பிறழ்வின் உப பிறழ்வெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது பரவும் டெல்டா வைரஸின் உப பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராயச்சி நிறுவகம் நேற்று (25) அறிவித்தது.

எதிர்காலத்தில் மேலும் பல உப பிறழ்வுகள் உருவாகக்கூடும் என மருத்துவ ஆராயச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்று தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானக குறிப்பிட்டிருந்தார்.

புதிய உப பிறழ்வு மற்றும் டெல்டா பிறழ்வின் செயற்பாடுகள் ஒரே விதமாக காணப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image