போராட்டத்தை தவிர வேறு வழியில்லை - ஜோசப் ஸ்டாலின்

போராட்டத்தை தவிர வேறு வழியில்லை - ஜோசப் ஸ்டாலின்

அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாவிடின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி போராட்டத்தை ஆரம்பித்து நேற்றுடன் 58 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இன்றைய தினம் அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் 5000 ரூபா என்ற வகையில் இரு தடவைகள் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. ஏனையதை வரவுசெலவின் ஊடாக தருவதாக கூறுகிறார்கள். இம்மாதமும் அடுத்த மாதமும் தலா ஐந்தாயிரம் ரூபா வழங்கினால் அதற்கடுத்த மாதம் தொடக்கம் டிசம்பர் வரை எதுவும் வழங்கப்படாது.. சம்பளம் ஜனவரி மாதம் தான் அதிகரிக்கும். இது தொடர்பில் தௌிவில்லை.ஐந்தாயிரம் ருபா தொடர்பில் இதுவரை சுற்றுநிரூபம் இதுவரை வௌியிடப்படவில்லை. அமைச்சரவை உபகுழுவின் முன்மொழிவை ஒரே முறையில் செயற்படுத்தவேண்டுமென்றே நாம் தௌிவாக கூறுகிறோம்.

இதனை 4ஆக பிரித்தால் ஒரு ஆசிரியருக்கு 937 ரூபாவே கிடைக்கிறது. அதிபருக்கு மூவாயிரம் ரூபா மாதத்திற்கு கிடைக்கிறது. நாளொன்று 100 ரூபா என்ற வகையிலேயே கிடைக்கிறது. தற்போது வௌியிடப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு அறிக்கையை செயற்படுத்த முதல் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி சில இணக்கப்பாடுகளை பெற்று இதனை செயற்படுத்த வேண்டும்.

நாம் இந்தளவுக்கு இணங்கிச் சென்ற போதிலும் தீர்வொன்றை பெற அரசாங்கம் முன்வராவிடின் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை. தீர்வு அரசாங்கத்திடமே உள்ளது. கலந்துரையாடலுக்கு பல தடவைகள் அழைத்தும் வாய்ப்பு வழங்காவிடின் எமக்கு பிரச்சினையும் இல்லை.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image