தற்போது நாட்டில் நிலவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் 27ம் திகதி அறிவிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (27) நடைபெறவுள்ள ஜனாதிபதி செயணி கூட்டத்தின் பின்னர் உயிரிழக்கும் நோயாளர்களுடைய இறப்பின் இறப்பை பொருத்து 30ம் திகதியின் பின்னர் நடமாட்டத் தடையை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார விதிமுறை மற்றும் சுகாதார பழக்க வழக்கங்களை மக்கள் நூறு வீதம் பின்பற்றுவதை காண முடியாதுள்ளது என்றும் நடமாட்டத் தடை விதித்து புதிய நோயாளர்கள் உருவாவதை தவிர்ப்பதே நோக்கமாகும். மக்கள் அதிகம் ஒன்று கூடாமல் இருப்பதனூடாகவே வைரஸ் பரவுவதை தடுக்ன முடியும். எனவே நடமாட்டத் தடை காலப்பகுதியில் முடிந்தளவு விடுகளிலேயே தங்கியிருங்கள். அவ்வாறு இல்லையேல் நோயாளர் எண்ணிக்கை குறையாது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.