சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில்

சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில்

திட்டமிட்டபடி சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் இன்று (05) இன்று முன்னெடுக்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

விசேட விடுமுறைகளை ரத்து செய்தமை மற்றும் கர்ப்பிணி தாதியரை பணிக்கு அழைத்துள்ளமை உட்பட பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (04) மாலை சுகாதார அதிகாரிகளுடம் இடம்பெற்ற கலந்துரையாடலில் எழுத்து மூலமான உத்தரவாதங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கதின் பொதுச் செயலாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்

விடுமுறை மற்றும் பணிக்கு அழைத்துள்ளமை போன்றவை தொடர்பில் ஜனாதிபதி செயலாளரிடம் கலந்துரையாடி தீர்வு வழங்குவதாக உரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றும் இன்று காலை 7.00 மணி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் சுகாதாரதுறைசார் 44 தொழிற்சங்கங்கள் பங்களிப்பு வழங்கியுள்ளதாகவும் இப்போராட்டம் 12 மணி வரை அனைத்து பணிகளில் இருந்தும் அனைத்து சுகாதார துறை ஊழியர்களும் விலகியிருப்பர் என்றும் 12 மணி தொடக்கம் 1.00 மணி வரை ஆர்ப்பாட்டதை முன்னெடுக்கவுள்ளனர் என்றும் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image